வவுனியாவில் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை : நடந்தது என்ன?(வீடியோ)





வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (06.03.2017) இரவு 7.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கையில் வசித்துவரும் விநாயகமூர்த்தி ரமணி என்ற வயது 60 பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மனநலம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்று வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் நேற்று (06.03.2017) மாலை வீட்டில் அவரது உறவினர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் அவரும் அவரது பெறாமகளும் இருந்துள்ளனர்.
இவரது பெறாமகள் தொலைக்காட்சி பார்வையிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் இவர் வீட்டில் வெளியே நடமாடிக்கொண்டிருந்துள்ளார்.
இரவு 7.30 மணியளவில் வெளியே சென்ற இவரது உறவினர்கள் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு திரும்பிய வேலையில் முச்சக்கரவண்டியின் ஒளியில் குறித்த பெண் (விநாயகமூர்த்தி ரமணி) வீட்டின் வெளியே காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த சடலம் மருத்துவ அறிக்கைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்குறிய மருத்துவ அறிக்கை மற்றும் கிளினிக் சென்றதற்கான ஆதாரங்களை பொலிஸாரிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Similar Videos

0 comments: