Showing posts with label வவுனியா TEMPLES. Show all posts
Showing posts with label வவுனியா TEMPLES. Show all posts

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் -08.06.2017

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று(08.06.2017)காலை காலை இடம்பெற்றது .

அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று  காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து  காளிகாம்பாள்  உள்வீதி வளம் வந்து 8.30 தேரில் எழுந்தருளி 8.45  மணியளவில் இரத பவனி இடம்பெற்றது .

மேற்படி தேர் திருவிழாவில் அடியார்கள் அங்கபிரதட்சினை மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தியும் தங்களது நேர்த்திகடன்களை  செலுத்தினர் .
காலை பத்துமணியளவில்  தேர் இருப்பிடத்தை  வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது .

வவுனியா புனித அந்தோனியார்ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

.

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார்  தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது ..

மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை பத்து தினங்கள் இடம்பெறுகின்றது .. திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சூழவுள்ள பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் (படங்கள் ,வீடியோ)

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம்கடந்த  31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகியது .

கடந்த மூன்று தினங்களாக  இடம்பெற்ற  உற்சவநிகழ்வுகள் தொடர்பான  காட்சிகள்..


வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து எட்டுமணியளவில் எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர். 

தொடர்ந்து எட்டரை மணியளவில் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன. .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் திருட்டு!!



வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16.04.2017) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியலை உடைத்து பெருமளவு பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று (16.04) மாலை 6 மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும் இன்று காலையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது ஆலயம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
ஆலயத்திற்கச் சென்ற பொலிஸ் குழுவினர் ஆலய நிர்வாக சபையினரிடமும் ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது ஆலய மூலஸ்தானம் கத்தி கொண்டு உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தின் அலுவலகத்தினை திருடர்கள் உடைத்து அலுமாரிகளை உடைத்து அதிலிருந்த பெறுமதிமிக்க ஒலிபெருக்கிச் சாதனத்தினை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது
ஆலய முன்றலிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)


வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது.  

வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும்.

 மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன்  அங்கபிரதட்சினை  மற்றும் கற்பூரசட்டி  ஏந்தியும்  தங்களது நேர்த்திகடனையும் நிறைவு செய்திருந்தனர்.


வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பச்சை சாத்தல் உற்சவம் -08.04.2017

வவுனியாமாவட்டத்திலேயே #மிக பெரிய #சிவன்கோவிலான #வவுனியா #கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ #அகிலாண்டேஸ்வரி சமேத #அகிலாண்டேஸ்வரர்
 திருக்கோவில் வருடாந்த தேர்பவனி நேற்று 08.04.2017 காலை இடம்பெற்றது .

தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும்

வவுனியா இறம்பைக்குளம்  கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி  உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று  (09.04.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக ஹொரவப்பொத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி தீமிதித்து சென்றனர் .
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கபடுவது வழமையாகும்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த 09/04/2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு எட்டு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது. எட்டரை மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த  சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து கலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து  ஒன்பது  மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி  இருப்புக்கு கலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.
மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.  தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல்  ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த  அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும்  தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரம் பதினோராம் நாள் கைலாச வாகனம் !

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(05.04.2017) புதன்கிழமை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.

கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.

அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான்.
இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான்.

இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .
வழமை போன்று மாலையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கைலாச வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சி கயிலைதரிசனத்தை பக்தர்கள் கண்டு ஆனந்தம் கொண்டனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம்   நாளான நேற்று   06.04.2017 வியாழகிழமை  அன்று  வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று  மாலை ஐந்தரை  மணிக்கு ஆலயத்தில் இருந்து குதிரை வாகனத்தோடு ஊர்வலமாக புறப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வெளிகுளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாலை ஐந்தரை மணியளவில் வேட்டையை முடித்துக்கொண்டு  மீண்டும்  வெற்றி களிப்போடு கொரவபொத்தான  வீதி ஊடாக  ஊர் முழுதும் பூரண கும்பங்கள்  வைக்கப்பட்டு எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வரவேற்கப்பட்டார்.

 பக்த அடியார்களின்  வேண்டுதல்கள் காணிக்கைகளை பெற்று கொண்டும் அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணமும் ஆலயத்தை மாலை ஏழு மணியளவில் வந்தடைந்த பின்னர் பிராயசித்த அபிசேகம் இடம் பெற்று வழமைபோல் தம்பபூசை  அசந்த மண்டப பூசையுடன் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள் வீதி வெளிவீதி வலம் வந்து இரவு பத்து மணியளவில் திருவிழா நிறைவுபெற்றது .

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரம் பத்தாம் நாள் உற்சவம் !(படங்கள்,வீடியோ)

<வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம் நாள்உற்சவம் 04-04 -2017 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமான அபிசேகங்களை தொடர்ந்து மதியம் வசந்த மண்டப பூஜையின் பின் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சிங்க வாகனத்திலும் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் ஆகியோர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் . அன்றைய தினம் மாலையில் மஞ்ச திருவிழாவிற்குரிய உற்சவங்கள் கிரியைகளின் இறுதியில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் விநாயகர் மூசிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் ஆகியோர் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர்.  

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)



வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  03.04.2017 திங்கட்கிழமை  பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது.
பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாக சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.
இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.இக் கதையை சித்தரிக்கும் முகமாக மேற்படி திருவிழா கொண்டாடபடுகிறது சிவன் கோவில்களில்  தொடர்ந்து  வசந்த மண்டப பூஜையின் பின் சிவபெருமான் பிச்சண்டியாகவும்  விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானும் சண்டேஸ்வர பெருமானும்  உள்ளவீதி வெளி வீதி  வந்தனர்.


மீண்டும் மாலையில்ஆறுமணிக்கு வசந்த மண்டபபூஜையை  தொடர்ந்து அழகிய  மலர் தண்டிகையில் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயிலிலும்  விநாயகர்  மூசிக வாகனத்திலும் பவனி வந்தனர்.