வவுனியாவில் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள்


வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று (17.04.2017) காலை 8.30 மணிக்கு கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் மீட்கப்பட்டன.

நேற்றைய தினம் (16.04) இரண்டு குட்டி யானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்திருந்த நிலையில் ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.

ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் அதிகாரிகள் சமூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.

எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்புப் பணியினை தொடர முடியாமையினால் இன்று காலை இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் பெக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

மீட்க்கப்பட்ட யானைகளில் ஒன்று பெக்கோ கனகரக வாகனத்தை தாக்கியதுடன் அதில் இருந்தவர்களை தாக்க முற்பட்ட சமயம் வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டது.

மற்றையா யானை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்க்கப்பட்டு காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது.

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் திருட்டு!!



வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16.04.2017) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியலை உடைத்து பெருமளவு பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று (16.04) மாலை 6 மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும் இன்று காலையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது ஆலயம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
ஆலயத்திற்கச் சென்ற பொலிஸ் குழுவினர் ஆலய நிர்வாக சபையினரிடமும் ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது ஆலய மூலஸ்தானம் கத்தி கொண்டு உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தின் அலுவலகத்தினை திருடர்கள் உடைத்து அலுமாரிகளை உடைத்து அதிலிருந்த பெறுமதிமிக்க ஒலிபெருக்கிச் சாதனத்தினை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது
ஆலய முன்றலிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!


வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன. ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள். ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர். இதன் போது மீட்டெ டுக்கப்பட்ட குட்டியானையொன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்ப்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் தற்போது இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் இம் மீட்புப் பணி இன்று (17.04.2017) காலை தொடர்ந்தது. இம் மீட்புப் பணியில் மேலும் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு யானை காப்பாற்ற முயன்ற அதிகாரியை தாக்கியதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த யானை பரிதாபமாக பலியானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)


வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது.  

வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும்.

 மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன்  அங்கபிரதட்சினை  மற்றும் கற்பூரசட்டி  ஏந்தியும்  தங்களது நேர்த்திகடனையும் நிறைவு செய்திருந்தனர்.


வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!!

வவுனியாவில் இன்று (11.04.2017) மாலை 3.30 மணிமுதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
மழையுடன் வீசிய கடும் காற்றினால் மக்களின் காணி வேலிகள் சிலவும் சேதமடைந்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்கு வெள்ளநீர் உட்புகும் நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பதட்டம்: இரு குழந்தைகளை காப்பாற்றிய ஊடகவியலாளர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று(08.04.2017) நடாத்தப்பட்டது.
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன், வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
இந் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச்சேர்ந்த பொது மக்கள் அடையாள அட்டை, பிறப்பு, விவாக மற்றும் மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம், ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், வேலைவாய்ப்பு, சமுர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள வந்திருந்தனர்.
நடமாடும் சேவை நடைபெறும் இடத்தில் பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்தபடி கொழுத்தும் வெய்யிலில் தங்கள் தேவைகளை நிறைவேற்ற காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் வயதானவர்கள் சிறுவர்கள் மக்கள் நெரிசலில் தத்தளித்த நிலையில் கூட்டத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை ஊடகவியலாளர்கள் காப்பாற்றி அவர்களின் பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றது.
அத்துடன் நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தில் மக்களை சரியாக ஒழுங்குபடுத்தல் இல்லாத நிலையில் அதிகாரிகளால் மக்களின் ஆவணங்களை சரிபார்க்க முடியாத நிலை காணப்பட்டதுடன், அதிகாரிகள் சேவை வழங்கிய மேசை கதிரை போன்ற தளபாடங்கள் தள்ளி விழுத்தப்பட்ட நிலையில் பொலிசாரால் ஆவணங்கள் அள்ளிச் செல்லப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் முண்டியடித்ததன் காரணமாக பாடசாலையின் பிரதான வாயில் இழுத்து மூடப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சாரதா கர்ணனிடம் விளக்கம் கேட்ட நிலையில் மக்களுக்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. மக்கள் முண்டியடிப்பதன் காரணமாக நிலைமையை சமாளிக்க முடியாதுள்ளது என தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பச்சை சாத்தல் உற்சவம் -08.04.2017

வவுனியாமாவட்டத்திலேயே #மிக பெரிய #சிவன்கோவிலான #வவுனியா #கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ #அகிலாண்டேஸ்வரி சமேத #அகிலாண்டேஸ்வரர்
 திருக்கோவில் வருடாந்த தேர்பவனி நேற்று 08.04.2017 காலை இடம்பெற்றது .

தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .