வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து கலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு கலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.
மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும் தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா சின்னடம்பனில் லைக்கா ஞானம் கிராமம் மக்களிடம் கையளிப்பு!
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோர் இணைந்து பயனாளிகளிடம் தற்போது வீடுகளைக் கையளித்தனர்.
அவர்களைத் தவிர பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டு, மக்களுக்கான வீடுகளைக் கையளித்னர். குறித்த 150 வீடுகளும் சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(2ஆம் இணைப்பு)
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா உட்பட பிரதம விருந்தினர்கள், விசேட அழைப்பாளர்கள் என சகலரும் அங்கு சென்றுள்ளனர்.
சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராமத்தை கைளிக்கும் நிகழ்வினை முன்னிட்டு சின்ன அடம்பன் மற்றும் பரிசங்குளம் ஆகிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, ஸ்தாபகத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரின் பரந்துபட்ட மனிதாபிமான செயற்பாடுகளில் ஒன்றாகவே, இந்த கிராமம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பல தாசாப்த காலமாக பூந்தோட்டம் உள்ளிட்ட முகாம்களில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களுக்கே, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் இந்த வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்து வைக்கும் வகையில் லைக்கா ஞானம் அறக்கட்டளை, சின்ன அடம்பன் பகுதியில் 150 வீடுகள் அடங்கிய இந்த புதிய கிராமத்தை அமைத்துள்ளது.
குறித்த கிராமத்தில் சிறுவர்களுக்கான பூங்கா, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், சமூக அபிவிருத்தி மையம், ஆன்மீக வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகளை கையளிப்பதற்கான ஆயத்தங்கள் பூர்த்தி
அத்தோடு, பயனாளிகளும் விருந்தினர்களும் தற்போது அவ்விடத்திற்கு வருகை தந்துகொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லைக்காக ஞானம் அறக்கட்டளையானது வடக்கு கிழக்கில் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
தற்போது, கடந்த கால அனர்த்தங்களினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளை இலவசமாக வழங்கவுள்ளமையானது, லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பணிகளில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளதென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரம் பதினோராம் நாள் கைலாச வாகனம் !
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(05.04.2017) புதன்கிழமை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.
அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான்.
இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான்.
இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .
வழமை போன்று மாலையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கைலாச வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சி கயிலைதரிசனத்தை பக்தர்கள் கண்டு ஆனந்தம் கொண்டனர்.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.
அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான்.
இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான்.
இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .
வழமை போன்று மாலையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கைலாச வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சி கயிலைதரிசனத்தை பக்தர்கள் கண்டு ஆனந்தம் கொண்டனர்.
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ
அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ
விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம் நாளான நேற்று 06.04.2017 வியாழகிழமை அன்று வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று மாலை ஐந்தரை மணிக்கு ஆலயத்தில் இருந்து குதிரை வாகனத்தோடு
ஊர்வலமாக புறப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வெளிகுளம் சித்திவிநாயகர்
ஆலயத்தில் மாலை ஐந்தரை மணியளவில் வேட்டையை முடித்துக்கொண்டு மீண்டும் வெற்றி களிப்போடு கொரவபொத்தான வீதி ஊடாக ஊர் முழுதும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி
சமேத அகிலாண்டேஸ்வரர் வரவேற்கப்பட்டார்.
பக்த அடியார்களின் வேண்டுதல்கள் காணிக்கைகளை பெற்று கொண்டும்
அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணமும் ஆலயத்தை மாலை ஏழு மணியளவில் வந்தடைந்த
பின்னர் பிராயசித்த அபிசேகம் இடம் பெற்று வழமைபோல் தம்பபூசை அசந்த மண்டப பூசையுடன் அகிலாண்டேஸ்வரி சமேத
அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள் வீதி
வெளிவீதி வலம் வந்து இரவு பத்து மணியளவில் திருவிழா நிறைவுபெற்றது .
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரம் பத்தாம் நாள் உற்சவம் !(படங்கள்,வீடியோ)
<வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம் நாள்உற்சவம் 04-04 -2017 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமான அபிசேகங்களை தொடர்ந்து மதியம் வசந்த மண்டப பூஜையின் பின் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சிங்க வாகனத்திலும் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் ஆகியோர் இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .
அன்றைய தினம் மாலையில் மஞ்ச திருவிழாவிற்குரிய உற்சவங்கள் கிரியைகளின் இறுதியில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனத்திலும் விநாயகர் மூசிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் ஆகியோர் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர்.
Subscribe to:
Posts (Atom)