வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)



வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  03.04.2017 திங்கட்கிழமை  பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது.
பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாக சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.
இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.இக் கதையை சித்தரிக்கும் முகமாக மேற்படி திருவிழா கொண்டாடபடுகிறது சிவன் கோவில்களில்  தொடர்ந்து  வசந்த மண்டப பூஜையின் பின் சிவபெருமான் பிச்சண்டியாகவும்  விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானும் சண்டேஸ்வர பெருமானும்  உள்ளவீதி வெளி வீதி  வந்தனர்.


மீண்டும் மாலையில்ஆறுமணிக்கு வசந்த மண்டபபூஜையை  தொடர்ந்து அழகிய  மலர் தண்டிகையில் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயிலிலும்  விநாயகர்  மூசிக வாகனத்திலும் பவனி வந்தனர்.























































வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!


வவுனியா பாலமோட்டை ஓமந்தை மாதர்பணிக்கர்மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (03.04.2017) காலை பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் ஒன்றிணைந்து தமது பாடசாலை அதிபரை இடம்பெற்றம் செய்யுமாறு கோரி பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
குறித்த பாடசாலை அதிபர் தகாத வார்த்தைகளைப் பேசி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைப்பதாகவும் இடம் நேரம் காலம் பார்க்காமல் தரைக்குறைவான வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வதாகவும், காலை பிராத்தனை இடம்பெறும்போது தகுதி தராதரம் பார்க்காமல் பேசி மாணவர்களை அழைப்பதாகவும் உடனடியாக அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பாடசாலைக்கு ஓமந்தைப் பொலிசார், அப்பகுதி கிராம அலுவலகர் சென்று மாணவர்களை ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் பேசி சமாதான முறையில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை 12 மணிவரை மேற்கொண்டனர்.
பாடசாலைக்கு வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் வி.ஸ்ரீஸ்கந்தராஜா சென்றதுடன் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
பின்னர் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் மாணவர்களை பாடசாலைக்குள் செல்லுமாறும் உரிய தீர்வு பெற்றுத்தருமாறு தெரிவித்ததையடுத்து மாணவர்கள் உட் சென்றனர்.
எனினும் பாடசாலை விடுமுறை 5ம் திகதியாகையால் உடனடியாக வலயப் பணிப்பாளர் எதுவும் செய்யமுடியாது, அதிபரை இடமாற்றுவதற்கு உடனடி சாத்தியமில்லை விடுமுறை ஆரம்பமாகும்போது உரிய கவனம் எடுத்து தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றனர்.
அதிபரின் செயற்பாட்டிற்கு பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரிய பதாதைகளுடன் மாணவர்கள் இன்றைய போராட்டத்தை மேற்கொண்டனர்

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் எட்டாம்நாள் ரூபாய் நோட்டு அலங்காரம்!




வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம்  நாளான நேற்று 02-04 -2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல்மகோற்சவ   குரு சிவஸ்ரீ கமலேஸ்வர   குருக்கள் தலைமையில்  காலையில் சங்காபிசேகம் நடைபெற்று  பின்னர் தைலாப்பிய உற்சவத்துக்குரிய அபிசேகங்கள் இடம்பெற்று   வசந்தமண்டப  பூஜையின் பின் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது .
மீண்டும்  மாலை உற்சவத்துகுரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 7 ஆம் நாள் வசந்த உற்சவம் !

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாளான நேற்று    01-04 -2017 சனிக்கிழமை   காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள்  இடம்பெற்று  மதியம் வசந்த மண்டபபூயையின் பின்  விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும்  மூசிகம் மற்றும் மயில்  வாகனங்களிலும்  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .

 மாலை வசந்தமண்டப பூஜையின் பின் அமிர்தவர்ஷினி தீர்த்த கரைக்கு     விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும்  மூசிகம் மற்றும் மயில்  வாகனங்களிலும்  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடப  வாகனதிலும்  எழுந்தருளியிருந்தனர் .பின்னர்   தீர்த்தக்கரையில்  மன்மதன் ரதிக்கான அபிசேகங்கள் இடம்பெற்று    திருபொற்சுண்ணம் முதலியவை பாடப்பட்டு பக்தர்கள் தீர்த்தக்கரையில் இறைவனை நோக்கி கற்பூரம் கொளுத்தி  விடுகின்ற அருமையான வசந்த உற்சவம் இடம்பெற்றது.  தொடர்ந்து  திருவீதி உலாவந்து   வசந்த உற்சவம்  நிறைவு பெற்றது .

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய ஆறாம் நாள் உற்சவம்!


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று ம 31-03 -2017 வெள்ளிகிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் நடராஜ பெருமானுக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகங்கள் முதலியன இடம்பெற்று 10.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் தனி தனி வாகனங்களிலும் நடராஜரும் பார்வதியும் அசைந்து ஆடி ஆடி வீதி வலம் வந்தமை இன்றைய தினம் விசேட அம்சமாகும். ஈற்றில் நடராஜ பெருமானுக்குரிய யாகம் கலைக்கப்பட்டு வழமையான மதிய பூஜையுடன் பகல் திருவிழா நிறைவு பெற மாலை மமீண்டும் வழமை போல நான்கரை மணிக்கு மகா யாகம் தொடங்கப்பட்டது . அதன் பின் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப்  வாகனத்திலும் திருவீதி உலா வந்து மாலை திருவிழா இரவு ஒன்பது மணியளவில் நிறைவு பெற்றது