வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்
மூன்றாம் நாளான நேற்று 28-03 -2017 செவ்வாய்கிழமை காலை
முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள்
தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு
வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.
மீண்டும் மாலை கற்பகதரு காட்சிக்குரிய அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின்
மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு
வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான்
மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு
பெற்றது.
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பேருந்துகள் சீரில்லை மற்றும் நேரகாலத்திற்குச் செல்வதில்லை என்று தெரிவித்து இன்று (29.03.2017) காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் பேருந்து குறித்த நேரத்திற்குள் செல்வதில்லை. வவுனியாவில் இருந்து 7மணிக்குச் செல்லும் பேருந்து 9 மணிக்கு செட்டிகுளம் செல்கின்றது. இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் தமது கடமைகளை எவ்வாறு சரியாக மேற்கொள்ளமுடியும்?
பாடசாலை செல்லும் மாணவர்கள் சில பாடங்கள் முடிந்த பின்னரே பாடசாலை செல்லவேண்டி எற்பட்டுள்ளது. அதேபோல் அரச ஊழியர்களும் குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்குச் செல்லமுடியவில்லை. இது தொடர்பாக பல தடவைகள் இ.போ.ச. சாலைக்குத் தெரியப்படுத்தியிருந்தோம் எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தோம்.
நேரக்கணிப்பாளர் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்த முடியாது. வரும் அழைப்பை மட்டுமே பெறமுடியும். பேருந்து வந்தால் செல்லும் என்றும் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று போராட்டம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இன்று மத்திய பேருந்து நிலையத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டபோது செட்டிகுளத்திற்கு திடீரென ஒரு பேருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அரச ஊழியர்கள் துரத்திச் சென்றும் பேருந்து நிற்காமல் சென்றதைக்காணக்கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மனு ஒன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை செட்டிகுளம் பகுதியில் பேருந்து நிலையத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின் இரண்டாம் நாளான நேற்று 27.03.2017 காலை முதல் கிரியைகள இடம்பெற்று வசந்த மண்டப பூஜையின் பின் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் காமதேனு வாகனத்திலும் வினாயகபெருமான் மூஷிக வாகனத்திலும் வீதியுலா வந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் அவர்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.
வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.
அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப் பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
வவுனியாவில் இளநீர் ஒன்று எண்பது ரூபா தொடக்கம் நூறு ரூபா வரைக்கும், தர்ப்பூசணிப் பழம் ஒரு கிலோ எண்பது ரூபாவிற்கும் விற்பனையாகின்றது.
செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுத்துவிடும்.
இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே அது தரும் பலன்களும் அதிகம்.
இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில் இளநீர் நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.
வவுனியாவில் கடந்த 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (19.03.2017) மதியம் 2.30மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெருவில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? , அரசே காணாமல் ஆக்கப்படோருக்கு பதில் கூறு, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்… என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர்.