வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!!



வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியளவில் நிறைவு பெற்றது.
அதன் பின்னர் இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம்நடைபெற்றது.
இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்ததைகள் சம்பந்தமாகவும் இலங்கை சம்பந்தமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகின்ற சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமாக வரைவு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்றன.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லுவதற்காக நாள் முழுவதும் கருத்துப்பரிமாறல்கள் மேற்கொண்டோம். இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் தற்போழுது வாசிக்கின்றேன்..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட எச் ஆர் சி 30 ஒன்று என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.
இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் ஒன்று நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்படவேண்டும்.
இலங்கை அரசாங்கம் மேற்சென்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகள் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக சர்வதேச பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை உறுதி செய்யவேண்டும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்தத் திர்மானத்தோடு தங்களுடைய கட்சிக்கு இணங்க உடன்பாடு இல்லை என்பதைத் தெரிவித்தார். அதையும் நாங்கள் குறித்திருக்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் காதல் விவகாரத்தில் வீடு தீக்கிரை


 வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குறிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையறிந்த பெண் தனது காதலனுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றால் நான் இறந்து விடுவேன் என்றும் தன்னை எங்காவது கூட்டிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் நடைபெற்று ஒருவாரத்தின் பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று கொழும்பில் தனிமையில் ஒருமாத காலம் வாழ்த்து வந்துள்ளனர்.
பெண் வீட்டார் இவர்களை தேடியுள்ளனர். இவர்கள் கிடைக்காவிடத்து பெண்ணின் புகைப்படத்தினை முகநூலில் பிரசுரித்து இவரை காணவில்லை கண்டுபிடித்த தருபவர்களுக்கு தகுந்த சர்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இவர்களின் முகநூல் பதிவினை கண்ணுற்ற ஒருவர் இவர்களை கொழும்பில் வைத்து அடையாளம் கண்டுள்ளார். உடனே இவர்களின் முகநூல் பதிவில் காணப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவர்கள் இங்கு உள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழுப்பிற்கு விரைந்த பெண் வீட்டார் குறித்த பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து வவுனியாவிற்று வந்த குறித்த பெண் தனது காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தான் தற்போது வவுனியாவில் நிற்பதாகவும் என்னை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
உடனே வவுனியாவிற்று சென்ற குறித்த இளைஞன் பெண்ணை அழைத்து ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண் வீட்டாரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு பொலிசாரிடம் வேண்டியுள்ளார்.
ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த பெண் மற்றும் இளைஞனை சேர்ந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இருவரும் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்த சமயத்தில் நேற்று (11.03.2017) மதியம் 2.30 மணியளவில் பெண் வீட்டார் வெள்ளை நிற வாகனத்தில் இளைஞனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையாளங்களை பார்வையிட்டதுடன் குறித்த இளைஞனின் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை : நடந்தது என்ன?(வீடியோ)





வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (06.03.2017) இரவு 7.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கையில் வசித்துவரும் விநாயகமூர்த்தி ரமணி என்ற வயது 60 பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மனநலம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்று வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் நேற்று (06.03.2017) மாலை வீட்டில் அவரது உறவினர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் அவரும் அவரது பெறாமகளும் இருந்துள்ளனர்.
இவரது பெறாமகள் தொலைக்காட்சி பார்வையிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் இவர் வீட்டில் வெளியே நடமாடிக்கொண்டிருந்துள்ளார்.
இரவு 7.30 மணியளவில் வெளியே சென்ற இவரது உறவினர்கள் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு திரும்பிய வேலையில் முச்சக்கரவண்டியின் ஒளியில் குறித்த பெண் (விநாயகமூர்த்தி ரமணி) வீட்டின் வெளியே காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த சடலம் மருத்துவ அறிக்கைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்குறிய மருத்துவ அறிக்கை மற்றும் கிளினிக் சென்றதற்கான ஆதாரங்களை பொலிஸாரிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் 17வது நாளாகத் தொடரும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்!!


வவுனியாவில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(12.03.2017) 17வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும், அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இப் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்ப்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாடுவெட்டும் கொல்களம் மூடல் ! 15 தொழிலாளர்கள் பாதிப்பு!!


வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டும் கொல்களத்தில் கடந்த நான்கு தினங்களாக மாடுகள் வெட்டும் பணிகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நேற்று (11.03.2017) தமது பணிகளை மேற்கொள்வதற்கு கொல்களத்திற்கு சென்ற தொழிலாளர்கள் கால்நடை வைத்திய அதிகாரி வருகை தந்திருந்தும் நகரசபை சுகாதார பரிசோதகர்கள் சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று மூன்றாவது நாளாகவும் பணிக்கு சமூகமளித்த தொழிலாளர்கள் பணி இடம்பெறவில்லை என்று திரும்பிச் சென்றனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாடு வெட்டும் தொழிலினை நம்பி குடும்பத்தினை நடாத்தி வருவதாகவும் கடந்த சில தினங்களாக வேலைக்குச் சென்றும் அங்கு அதிகாரிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை வைத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டுள்ளதாகவும் தமது பிள்ளைகள், மனைவிமார் பெரும் சிரமத்தில் தமது குடும்பங்களை நடாத்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று (11.03.2017) மூன்றாவது நாளாகவும் பணிகள் இடம்பெறவில்லை இன்றும் ஏறமாற்றத்துடனனே வீடு செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.