வவுனியாவில் இளைஞர்கள் குழுவினர் 6 பேருக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!


வவுனியாவில் 6பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு நேற்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை வழிமறித்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்களை சோதனை மேற்கொண்டபோது வாள்கள், கத்திகள், பொல்லுகள் கைக்குண்டு என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

 வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதையடுத்து பிணையில் செல்ல அனுமதிவழங்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தது. நேற்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது முச்சக்கரவண்டியில் அபாயகரமான ஆயுதங்களை தமது உடமையில் வைத்திருந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த 6 பேரடங்கிய இளைஞர் குழவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருக்கே 10வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்தமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
 வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார். தீர்ப்பு வழங்கியவுடன் எதிரிகளின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே அமர்ந்திருந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது பொலிசார் சென்று அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.
வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா என மக்கள் கேள்வி!!

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா என மக்கள் கேள்வி!!



வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (16.06.2017) காலை 10.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகள் நீதிபதியை தண்டிப்பதா, எதிர்கட்சிகளோடு கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் சகுனிகளே வெளியே போ, , இளைஞர்கள் புரட்சி மக்கள் எழுச்சி விக்கி வெற்றி, மக்கள் தெருவில் மாகாணசபை திமிரில், எதிர்கட்சிகளோடு ஒப்பந்தம் மக்களுக்கு தீப்பந்தம் என பல்வேறு வாகசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

இப் போராட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் , முச்சக்கரவண்டி சாரதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இப் போராட்டமானது சுமார் ஒரு மணிநேரம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.


வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் -08.06.2017

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று(08.06.2017)காலை காலை இடம்பெற்றது .

அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று  காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து  காளிகாம்பாள்  உள்வீதி வளம் வந்து 8.30 தேரில் எழுந்தருளி 8.45  மணியளவில் இரத பவனி இடம்பெற்றது .

மேற்படி தேர் திருவிழாவில் அடியார்கள் அங்கபிரதட்சினை மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தியும் தங்களது நேர்த்திகடன்களை  செலுத்தினர் .
காலை பத்துமணியளவில்  தேர் இருப்பிடத்தை  வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது .

வவுனியா புனித அந்தோனியார்ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

.

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார்  தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது ..

மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை பத்து தினங்கள் இடம்பெறுகின்றது .. திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சூழவுள்ள பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் (படங்கள் ,வீடியோ)

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம்கடந்த  31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகியது .

கடந்த மூன்று தினங்களாக  இடம்பெற்ற  உற்சவநிகழ்வுகள் தொடர்பான  காட்சிகள்..