வவுனியாவில் கடும்காற்றுடன் கூடிய மழை : கார் ஒன்று சேதம், முறிந்து விழுந்த மரங்கள்!!



வவுனியாவில் இன்று (24.05.2017) மதியம் முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த பழமைவாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்ப்படுத்தி சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில் மரம் வெட்டி அகற்றப்பட்டது
மற்றும் வவுனியா இலுப்பையடிசந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை
இவ் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகவும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


வவுனியாவில் வெசாக் அலங்கார வடிவமைப்புக்களை பார்வையிட திரண்ட மக்கள்!!

A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரையான பகுதியில் 100க்கு மேற்ப்பட்ட வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா போதி தக்ஸினாராம விகாரைக்கு முன்பாக பல வெசாக் கூடுகளை பொலிஸார் வடிவமைத்து பொதுமக்களின் பார்வைகளுக்காக வைத்துள்ளனர்.
இதனை பார்வையிடுவதற்காக மூன்றுமுறிப்பு பகுதியிலிருந்து வவுனியா நகரம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
வவுனியா நகரின் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார வெளிச்சக் கூடுகளை பார்வையிட வரும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி தலைமையில் பொதுமக்களுக்கு கடலை தானமாக வழங்கப்ட்டது.
வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியலாயத்தில் கலை நிகழ்வுகள், தாக சாந்தி நிலையங்கள், குளிர்பானங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து எட்டுமணியளவில் எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர். 

தொடர்ந்து எட்டரை மணியளவில் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன. .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .