வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள் ஆரம்பமாகி நாற்குரவர்களான  திருஞானசம்பந்தர் திருநாவுகரசர் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் ஆகிய மூர்த்திகளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி  விசேட அபிசேகங்கள்  ஆராதனைகள் முதலியவற்றுடன் சண்டேஸ்வரர் பெருமானும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கும் விசேட கிரியைகள் நடை பெற்று   பன்னிரு திருமுறைகள ஓதப்பட்டு  நாற்குரவர்களுடன் சண்டேஸ்வரப் பெருமானும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் முருகப்பெருமான் விநாயகர் முதலானோர் உள்வீதி  வெளி வீதி வலம் வந்து சுப்ரமணியகோமம் கலைக்கப்பட்டு பகல் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

மீண்டும் மாலை நான்கரை மணிக்கு பபூஜைகள் ஆரம்பமாகி   மாலை ஏழு மணியளவில் சண்டேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலானோர் உள்வீதி வெளிவீதி வலம் வந்து மாலை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் நான்காம் நாள்!

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம்   நாளான நேற்று  29-03 -2017 புதன்கிழமை    காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர  குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.

மீண்டும்  மாலை   அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடப காமவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

மாரியம்மா மாரியம்மா ........



வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவத்தின் பொது இடம்பெற்ற தவில் நாதஸ்வர கச்சேரியின் ஒருபகுதி ...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!




வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான நேற்று  28-03 -2017 செவ்வாய்கிழமை   காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர  குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.
மீண்டும்  மாலை கற்பகதரு காட்சிக்குரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.



வவுனியா செட்டிகுளத்திற்கான பேரூந்து சீரில்லை : அரச ஊழியர், மாணவர் ஆர்ப்பாட்டம்!!

<

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பேருந்துகள் சீரில்லை மற்றும் நேரகாலத்திற்குச் செல்வதில்லை என்று தெரிவித்து இன்று (29.03.2017) காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் பேருந்து குறித்த நேரத்திற்குள் செல்வதில்லை. வவுனியாவில் இருந்து 7மணிக்குச் செல்லும் பேருந்து 9 மணிக்கு செட்டிகுளம் செல்கின்றது. இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் தமது கடமைகளை எவ்வாறு சரியாக மேற்கொள்ளமுடியும்?
பாடசாலை செல்லும் மாணவர்கள் சில பாடங்கள் முடிந்த பின்னரே பாடசாலை செல்லவேண்டி எற்பட்டுள்ளது. அதேபோல் அரச ஊழியர்களும் குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்குச் செல்லமுடியவில்லை. இது தொடர்பாக பல தடவைகள் இ.போ.ச. சாலைக்குத் தெரியப்படுத்தியிருந்தோம் எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தோம்.
நேரக்கணிப்பாளர் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்த முடியாது. வரும் அழைப்பை மட்டுமே பெறமுடியும். பேருந்து வந்தால் செல்லும் என்றும் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று போராட்டம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இன்று மத்திய பேருந்து நிலையத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டபோது செட்டிகுளத்திற்கு திடீரென ஒரு பேருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அரச ஊழியர்கள் துரத்திச் சென்றும் பேருந்து நிற்காமல் சென்றதைக்காணக்கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மனு ஒன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை செட்டிகுளம் பகுதியில் பேருந்து நிலையத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய இரண்டாம் நாள்!



இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின் இரண்டாம் நாளான நேற்று 27.03.2017 காலை முதல் கிரியைகள இடம்பெற்று வசந்த மண்டப பூஜையின் பின் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் காமதேனு வாகனத்திலும் வினாயகபெருமான் மூஷிக வாகனத்திலும் வீதியுலா வந்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்-2017




இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  கமலேஸ்வர குருக்கள் அவர்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

வவுனியாவில் கடும் வெயில்! சூடுபிடித்துள்ள இளநீர், தர்ப்பூசணிப் பழங்களின் வியாபாரம்!


வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.

 அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப் பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. வவுனியாவில் இளநீர் ஒன்று எண்பது ரூபா தொடக்கம் நூறு ரூபா வரைக்கும், தர்ப்பூசணிப் பழம் ஒரு கிலோ எண்பது ரூபாவிற்கும் விற்பனையாகின்றது. செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுத்துவிடும்.

இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே அது தரும் பலன்களும் அதிகம். இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில் இளநீர் நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

வவுனியா நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து : சாரதி சம்பவ இடத்திலேயே பலி!(வீடியோ)




இன்று (20.03.2017) மாலை 4.30 மணியளவில் பூணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவாறு மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன என்பவரே பலியான சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தானது சாரதி தூக்க மயக்கத்தில் மரத்துடன் மோதியதால் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தெருவில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்




வவுனியாவில் கடந்த 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (19.03.2017) மதியம் 2.30மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெருவில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? , அரசே காணாமல் ஆக்கப்படோருக்கு பதில் கூறு, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்… என பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை  ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!!



வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியளவில் நிறைவு பெற்றது.
அதன் பின்னர் இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம்நடைபெற்றது.
இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்ததைகள் சம்பந்தமாகவும் இலங்கை சம்பந்தமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகின்ற சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமாக வரைவு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்றன.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லுவதற்காக நாள் முழுவதும் கருத்துப்பரிமாறல்கள் மேற்கொண்டோம். இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் தற்போழுது வாசிக்கின்றேன்..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட எச் ஆர் சி 30 ஒன்று என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.
இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் ஒன்று நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்படவேண்டும்.
இலங்கை அரசாங்கம் மேற்சென்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகள் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக சர்வதேச பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை உறுதி செய்யவேண்டும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்தத் திர்மானத்தோடு தங்களுடைய கட்சிக்கு இணங்க உடன்பாடு இல்லை என்பதைத் தெரிவித்தார். அதையும் நாங்கள் குறித்திருக்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் காதல் விவகாரத்தில் வீடு தீக்கிரை


 வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குறிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையறிந்த பெண் தனது காதலனுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றால் நான் இறந்து விடுவேன் என்றும் தன்னை எங்காவது கூட்டிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் நடைபெற்று ஒருவாரத்தின் பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று கொழும்பில் தனிமையில் ஒருமாத காலம் வாழ்த்து வந்துள்ளனர்.
பெண் வீட்டார் இவர்களை தேடியுள்ளனர். இவர்கள் கிடைக்காவிடத்து பெண்ணின் புகைப்படத்தினை முகநூலில் பிரசுரித்து இவரை காணவில்லை கண்டுபிடித்த தருபவர்களுக்கு தகுந்த சர்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இவர்களின் முகநூல் பதிவினை கண்ணுற்ற ஒருவர் இவர்களை கொழும்பில் வைத்து அடையாளம் கண்டுள்ளார். உடனே இவர்களின் முகநூல் பதிவில் காணப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவர்கள் இங்கு உள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழுப்பிற்கு விரைந்த பெண் வீட்டார் குறித்த பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து வவுனியாவிற்று வந்த குறித்த பெண் தனது காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தான் தற்போது வவுனியாவில் நிற்பதாகவும் என்னை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
உடனே வவுனியாவிற்று சென்ற குறித்த இளைஞன் பெண்ணை அழைத்து ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண் வீட்டாரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு பொலிசாரிடம் வேண்டியுள்ளார்.
ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த பெண் மற்றும் இளைஞனை சேர்ந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இருவரும் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்த சமயத்தில் நேற்று (11.03.2017) மதியம் 2.30 மணியளவில் பெண் வீட்டார் வெள்ளை நிற வாகனத்தில் இளைஞனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையாளங்களை பார்வையிட்டதுடன் குறித்த இளைஞனின் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை : நடந்தது என்ன?(வீடியோ)





வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (06.03.2017) இரவு 7.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கையில் வசித்துவரும் விநாயகமூர்த்தி ரமணி என்ற வயது 60 பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மனநலம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்று வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் நேற்று (06.03.2017) மாலை வீட்டில் அவரது உறவினர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் அவரும் அவரது பெறாமகளும் இருந்துள்ளனர்.
இவரது பெறாமகள் தொலைக்காட்சி பார்வையிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் இவர் வீட்டில் வெளியே நடமாடிக்கொண்டிருந்துள்ளார்.
இரவு 7.30 மணியளவில் வெளியே சென்ற இவரது உறவினர்கள் முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு திரும்பிய வேலையில் முச்சக்கரவண்டியின் ஒளியில் குறித்த பெண் (விநாயகமூர்த்தி ரமணி) வீட்டின் வெளியே காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த சடலம் மருத்துவ அறிக்கைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்குறிய மருத்துவ அறிக்கை மற்றும் கிளினிக் சென்றதற்கான ஆதாரங்களை பொலிஸாரிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் 17வது நாளாகத் தொடரும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்!!


வவுனியாவில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(12.03.2017) 17வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும், அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இப் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்ப்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாடுவெட்டும் கொல்களம் மூடல் ! 15 தொழிலாளர்கள் பாதிப்பு!!


வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டும் கொல்களத்தில் கடந்த நான்கு தினங்களாக மாடுகள் வெட்டும் பணிகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நேற்று (11.03.2017) தமது பணிகளை மேற்கொள்வதற்கு கொல்களத்திற்கு சென்ற தொழிலாளர்கள் கால்நடை வைத்திய அதிகாரி வருகை தந்திருந்தும் நகரசபை சுகாதார பரிசோதகர்கள் சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று மூன்றாவது நாளாகவும் பணிக்கு சமூகமளித்த தொழிலாளர்கள் பணி இடம்பெறவில்லை என்று திரும்பிச் சென்றனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாடு வெட்டும் தொழிலினை நம்பி குடும்பத்தினை நடாத்தி வருவதாகவும் கடந்த சில தினங்களாக வேலைக்குச் சென்றும் அங்கு அதிகாரிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை வைத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டுள்ளதாகவும் தமது பிள்ளைகள், மனைவிமார் பெரும் சிரமத்தில் தமது குடும்பங்களை நடாத்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று (11.03.2017) மூன்றாவது நாளாகவும் பணிகள் இடம்பெறவில்லை இன்றும் ஏறமாற்றத்துடனனே வீடு செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017!!


வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி கொடி -2017.03.02


வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி கொடி -2017.03.02


வவுனியா கோவில்குளம் மகா விஸ்ணு தேவஸ்தான சொர்க்கவாசல் -09.01.2017

வவுனியா விபுலானந்தா கல்லூரி பரிசளிப்புவிழா -18.11.2016